Venmathi Venmathiye Nillu Lyrics in Tamil
ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
ஆண்: உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
ஆண்: உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
ஆண்: அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆண்: அது போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஆண்: ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே
ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
ஆண்: உன்னை இன்றோடு
நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்
ஆண்: ஜன்னலில் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
ஆண்: தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
ஆண்: அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே