Thiruvizhannu Vantha Lyrics in Tamil
ஆண்: திருவிழான்னு வந்தா
இவ கோயில் வரமாட்டா
ஆண்: ஹே திருவிழான்னு வந்தா
இவ கோயில் வரமாட்டா
அரிச்சந்திரன் போல
இவ பொய் பேசமாட்டா
ஆண்: கண்ணகியப் போல
இவ கோவப் படமாட்டா
இன்னொரு விசயம் கேளு
குழு: என்ன என்ன என்ன
ஆண்: நீ இன்னொரு விசயம் கேளு
நான் உட்டதெல்லாம் ரீலு
ஆண்: வரமாட்டேன்னு சொன்னவளே
வந்து வந்து போறியே சின்னவளே
ஹே வரமாட்டேன்னு சொன்னவளே
வந்து வந்து போறியே சின்னவளே
ஆண்: ஆட்டோ மீட்டர் போல
இவ சூடு காட்ட மாட்டா
க்ளிண்டன் டாட்டர் போல
இவ பீட்டர் உட மாட்டா
ஆண்: டென்ட் கொட்டா போல
இவ பிலிம்மு காட்ட மாட்டா
இன்னொரு விசயம் கேளு
குழு: சொல்லுடா சொல்லு
ஆண்: நீ இன்னொரு விசயம் கேளு
நான் உட்டதெல்லாம் ரீலு
ஆண்: சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே
சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே
சிரிக்க மாட்டேன்னு சொன்னவளே
சிரிச்சு சிரிச்சு போறியே சின்னவளே
ஆண்: புஷ்பத்தூரு பொண்ணு
என்ன கொண்டு வாரா
காதுல வைக்க பூவு
கோயில்ல வைக்க பழம்
ஆண்: என்ன பழம் அந்த பழம்
நல்லா பாா்த்து சொல்லுடா
ஞானப்பழம்
ஆண்: ஆரஞ்சுபழம் ஆப்பிள் பழம்
திராட்சை பழம் பேரீச்சம் பழம்
சீதாபழம் கொய்யாப்பழம்
மாம்பழம் மாதுளம்பழம்
பலாபழம் வாழைப்பழம்
பெண்: தோடி ஆச வச்ச ராசா
நான் மீச வச்ச ரோசா
சந்தோசமா வந்து
நீ ஆடி பாடு லேசா
குழு: அஞ்சு பேரு நாங்க
அதில் ஒருத்தன் மட்டும் ஏங்க
எங்க கூட ஆட வாங்க
எங்க கூட ஆட வாங்க
அட இல்லாக்காட்டி போங்க
பெண்: போயா போயா
போயா போயா
வேலையத்தான் பாத்துகிட்டு
போயா போயா
ஆண்: ஹே பேச மாட்டேன்னு சொன்னவளே
பேசி பேசி போறியே சின்னவளே
ஆண்: மீன போல கண்ணு
இவ வலையில் விழ மாட்டா
மான போல காலு
இவ மிரண்டு ஓட மாட்டா
ஆண்: மயில போல அழகு
இவ இறக போட மாட்டா
இன்னொரு விசயம் கேளு
குழு: இதுவும் ரீல் தானடா
ஆண்: இது ரீலு இல்ல ரியலு
ஆண்: கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே
கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்னவளே
கொஞ்சி கொஞ்சி போறியே சின்னவளே