இசையமைப்பாளர்: டி. இமான்

பாடலாசிரியர்: யுகபாரதி

பாடகர்கள்: ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா கோஷல்

பாடல் வெளியான வருடம்: 2012

Sollitalae Ava Kadhala Song Lyrics in Tamil

ஆண்: சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வாா்த்தைய
கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்

பெண்: சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்

ஆண்: அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் இந்த சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண்: மனசையும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண்: அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்

பெண்: சொல்லிட்டேனே இவ காதல

ஆண்: சொல்லிட்டாளே அவ காதல

பெண்: எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பபாா்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண்: உதட்டுல இருந்து சொன்னா
தன்னால மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல

ஆண்: அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்

பெண்: சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும் ஏதும்

SHARE