இசையமைப்பாளர்: டி. இமான்

பாடலாசிரியர்: யுகபாரதி

பாடகர்: மகிழினி

பாடல் வெளியான வருடம்: 2012

Soi Soi Song Lyrics in Tamil

பெண்: சொய் சொய்
சொய் சொய்

பெண்: கையளவு
நெஞ்சத்தில கடல்அளவு
ஆச மச்சான் அளவு ஏதும்
இல்ல அதுதான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல
சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

பெண்: சொய் சொய்
சொய் சொய்

பெண்: வானளவு விட்டத்துல்ல
வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை
அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும்
வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

பெண்: சொய் சொய்
சொய் சொய்

பெண்: ஏடலவு எண்ணத்துல
எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அதுதான்
ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு
நன்மை செஞ்சாலே அதுவே
போதும் மச்சான்

பெண்: நாடளவு கஷ்டத்துல
நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோடே இல்ல அதுதான்
நேசம் மச்சான் நாம மாண்டு
போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

பெண்: சொய் சொய்
சொய் சொய்

பெண்: கையளவு நெஞ்சத்தில
கடல் அளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான்
காதல் மச்சான் நாம காணும்
எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

பெண்: சொய் சொய்
சொய் சொய் சொய் சொய்
சொய் சொய்

SHARE