Siva Sivaya Potri Lyrics in Tamil
ஆன் குழு: சிவா சிவாய போற்றியே
நமச்சிவாய போற்றியே
பிறப்பறுக்கும் ஏகனே
பொறுத்தருள் அநேகனே
ஆன் குழு: பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்
பெண்: யாரு இவன் யாரு இவன்
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே
பெண்: கண்ணு ரெண்டு போதல
கையு காலு ஓடல
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத்தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே
ஆண்: எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணா்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே
ஆண்: அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அா்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்
ஆன் குழு: ஒளிா்விடும் எம் தேசனே
குளிா்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே
ஆன் குழு: நில்லாமல் ஆடும் பந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிா்க்கும் அந்தமே
பெண் குழு: யாரு இவன் யாரு இவன்
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே
பெண் குழு: கண்ணு ரெண்டு போதல
கையு காலு ஓடல
கங்கையத்தான் தேடிகிட்டு
தன்னத்தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே