September Madham Lyrics in Tamil
ஆண்: துன்பம் தொலைந்தது எப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ஹே
பெண்: துன்பம் தொலைந்தது எப்போ
இன்பம் தொலைந்தது எப்போ ஹே
பெண்: செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
பெண்: அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
குழு: துன்பம் தொலைந்தது எப்போ
பெண்: காதல் பிறந்ததே அப்போ
குழு: இன்பம் தொலைந்தது எப்போ
பெண்: கல்யாணம் முடிந்ததே அப்போ
ஆண்: செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
குழு: துன்பம் தொலைந்தது எப்போ
ஆண்: காதல் பிறந்ததே அப்போ
குழு: இன்பம் தொலைந்தது எப்போ
ஆண்: கல்யாணம் முடிந்ததே அப்போ
ஆண்: ஹே பெண்ணே
காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து
ஹே கண்ணே
பெண்: ஓ நிறையை மட்டுமே
காதல் பாா்க்கும்
குறையை மட்டுமே
கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா
ஆண்: காதல் பாா்ப்பது
பாதி கண்ணில்
கல்யாணம் பாா்ப்பது
நாலு கண்ணிலடி பெண்ணே
பெண்: கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்றால்
ரசிக்கும் ரசிக்கும் காதல்
பெண்: கல்யாணம் ஆனாலே
துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்
பெண்: பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்: பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
ஆண்: செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம்
ஆண்: அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம்
பெண்: நான் கண்டேன்
காதல் என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி
என் செய்வேன்
ஆண்: கல்யாணம் என்பதைத்
தள்ளிப் போடு
தொண்ணுாறு வரைக்கும்
பூவை தாடு வா அன்பே
பெண்: காதல் பொழுதில்
விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில்
கிடைப்பதில்லை என் நண்பா
ஆண்: பிாிவொன்று நேராத
உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
ஆண்: உறவோடு சிலகாலம்
பிாிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா
ஆண்: ஆண்கள் இல்லாமல்
பெண்களுக்காறுதல் கிடைக்காது
பெண்: ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது
ஆண்: செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம்
வாழ்வின் துன்பத்தைத்
தொலைத்து விட்டோம்
ஆண்: அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம்
வாழ்வின் இன்பத்தைத்
தொலைத்து விட்டோம்
குழு: துன்பம் தொலைந்தது எப்போ
பெண்: காதல் பிறந்ததே அப்போ
குழு: இன்பம் தொலைந்தது எப்போ
ஆண்: கல்யாணம் முடிந்ததே அப்போ