Senganthal Kaiyaale Lyrics in Tamil
ஆண்: செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்
ஆண்: ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்
ஆண்: பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப்போனாலே
பல முறை அவளைப்பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே
ஆண்: ஈரம் மனதோரம்
நதி நதி என தானே
வந்தாள் வந்தாள்
ஆண்: தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே
தீண்டிச்சென்றாள்
ஆண்: செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்
ஆண்: ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்
ஆண்: ஏதோப்போல ஆனேன்
எதனாலே மாறிப்போனேன்
எமன் போலே கொல்லும் பார்வை
எனை உறசும்போதும் உயிர் வாழ்கிறேன்
ஆண்: அட யாரை தாண்டும் பொழுதும்
ஏதும் தோன்றிடாது
அவளைப் பார்க்கும் பொழுது
என் கால்கள் தாண்டிப்போகாது
ஆண்: நேற்றுப்பார்த்த நிலா
எட்டாத தூரம் தூரம்
ஏனோ ஏனோ இன்று
என் கைகள் நீட்டும் தூரம்
ஆண்: காற்றில் போகும் இலையானனே
ஏனோ நானும்
தூக்கிப்போனாய் என்னை
எங்கேயோப் போனேன் நானும்
ஆண்: தேடி தினம் தேடி
உடை உடுத்திடும் மாற்றம்
தந்தாள் தந்தாள்
ஆண்: மாயம் இது தானோ
என் நிழலுக்கும்
வண்ணம் ஏன் வந்ததோ
ஆண்: செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்
ஆண்: ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்
ஆண்: கூட்டம் கூடும் சாலை
விரல் கோர்த்து போகும் வேளை
பலர் பார்த்து போகும் போதும்
அது தனிமை போல ஏன் தோன்றுதோ
ஆண்: அவள் கூந்தல்ஆட தானே
தோளில் மேடை கேட்ப்பேன்
மெலிதாய் தீண்டும் போது
சிறிதாக கர்வம் கொள்வேனே
ஆண்: தீயில் செய்த கண்கள்
என் நெஞ்சை எட்டி பார்க்கும்
பூவில் நெய்த கைகள்
ஏதேதோ என்னை கேட்க்கும்
ஆண்: வானவில்லின் ஏழு
வண்ணம்தான் சாயம் போகும்
வெள்ளை மேகம் அவள்
எல்லோரா தோற்று போகும்
ஆண்: ஈரம் மனதோரம்
நதி நதி என தானே
வந்தாள் வந்தாள்
ஆண்: தூரம் வெகு தூரம்
ஒரு அலையெனதானே
தீண்டிச்சென்றாள்
ஆண்: பழகிய நாட்கள் எல்லாமே
அழகாய் மாற்றிப்போனாலே
பல முறை அவளைப்பார்த்தாலும்
அடங்கா ஆவல் கொடுத்தாளே
ஆண்: வானம் அதன் தாகம்
கடல் குடித்திடும் காலம்
வந்தாள் வந்தாள்
ஆண்: நேரம் வெகுநேரம்
உடன் நடந்திடும் ஆசை
தந்தாள் அவள்
ஆண்: செங்காந்தல் கையாலே
உயிரைத்தொட்டுப்போனாய்
ஒரு செந்தூர ஆகாயம்
கண்ணில் தந்துப்போனாய்
ஆண்: ஓயாத பூத்தூறல்
உள்ளே ஊற்றிப்போனாய்
அவள் தோள் சாய்ந்து நான் பேச
ஆசைமூட்டிப் போனாய்