
Pathikatha Thee Lyrics in Tamil
பெண்: பத்திக்காத தீயாய்
எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால்
எனை கொய்தாய்
பெண்: தத்தி தாவும் தீவாய்
எனை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே
மழை பெய்தாய்
பெண்: புது ரமலான் பிறை
இங்கு கொடுத்தான் இறை
அவன் அன்பால் நானும்
நிறைந்து வழிந்தேன்
பெண்: உன் போர்வையாய்
நான் இருக்கிறேன்
நீ எனை அள்ளி
தினம் தினம் தினம் போர்த்திடு
பெண்: பத்திக்காத தீயாய்
எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால்
எனை கொய்தாய்
பெண்: கத்தி பேசும் மொழியை
கொலை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே
மழை பெய்தாய்
ஆண்: ஓமனே என் ஓமனே
வான் மேகம் தேடும்
தாகம் நீ
ஆண்: வானிலே வரும் வெண்ணிலா
தினம் அள்ளி போகும்
மோகம் நீ
ஆண்: இன்னும் கொஞ்சம்
இந்த கொஞ்சல் நீளுமோ
பெண்: நீராடு நீ
என் உடல் எனும் கடலுக்குள் இடவலம்
நீராடு நீ
என் உயிர் சூழல் ஆழத்தில்
ஓடி நீ மூழ்குவாய்
நடு நீசி சுட நீ வேகுவாய்
நான் தான் கரைந்து உறைய
உதிருதே உடலின் மென்மைகள் தான்
பதறுதே பாவம் பாவை உடல்
பெண்: ஜன்னத்தில் உள் ஒரு
கஸ்தூரி முல்லையின்
பூக்கும் கனவுகளே
பெண்: தண்ணீர் பிறையில் தகிக்கும்
மீன் ஆனேன்
பன்னீர் அமிழ்தம் கசியும்
பூ ஆனேன்
பெண்: ஈர மணலில் நனையும்
நீர் ஆனேன்
காடு கடல்கள் பருகும்
பசி ஆனேன்
பெண்: என் நிலை கண்டு நீ
பேய் மழை பெய்திடு
நனைந்தாலும் ஏன் காய்கிறேன் நான்
பெண்: விடாமலே எனை விழுங்கிடு
கடல் குறுகி நதி குறுகி
துளி ஆகட்டுமே
ஆண்: வாடை தாண்டி
கோடை கூட தீர்ந்திடாத
ஸ்ம் ஸ்ம் நீ
ஆண்: தூது தந்த தூய நேய
பூரணத்தின் அம்சம் நீ
உன்னில் என்னை
ஊற்றி ஊற்றி தேற்றினேன்
பெண்: பத்திக்காத தீயாய்
எனை சூழ்ந்தாய்
குத்தி பார்க்கும் விழியால்
எனை கொய்தாய்
பெண்: தத்தி தாவும் தீவாய்
எனை செய்தாய்
நெத்தி வகுடில் நீயே
மழை பெய்தாய்
Other Songs From The Goat Life Aadujeevitham
Added by