பாரா

Paaraa Lyrics in Tamil
Movie: Indian 2(இந்தியன் 2)
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander and Shruthika Samudhrala
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)

Paaraa Lyrics in Tamil

ஆண்: பாரா
வருவது ஓராட் படையா
வீரா
விழுப்புண் அலங்காரா

ஆண்: மாறா
ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா
வரிப்புலி வரலாறா

ஆண்: தினவுள்ள தோள்கள் உண்டு
தீயைக் கக்கும் வாட்கள் உண்டு
புரவிக்கு றெக்கை உண்டு
புயலுக்கும்தான் உருவம் உண்டு

ஆண்: தொட்டுப்பார் கை நடுங்கும்
மூச்சடங்கும் இவனைக் கண்டு
வேட்டைக்கு போகுது பார்
வேங்கை வெகுண்டு

ஆண்: என் தாய் மண்மேல் ஆணை

ஆண்: எம் தாய் மண்மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண்: எம் தாய் மண்மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண்: பாரா
வருவது ஓராட் படையா
வீரா
விழுப்புண் அலங்காரா

ஆண்: மாறா
ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா
வரிப்புலி வரலாறா

பெண்: கன்னங்கரு இரவு போதாதா நமக்கு
வெள்ளைக்கார நிலா வான்மீது எதற்கு
ரத்தக்கறை படிஞ்ச உன் வாளின் முனைக்கு
முத்தக்கறை ஒன்னு வேணாமா துணைக்கு

பெண்: உன்னோட காலடி குளம்பாகனும்
உன்மேல விழும்புண் தழும்பாகனும்
உன் கையில் சேரும் வரமாகனும்
இல்ல தாய்மண்ணுக்கே நான் உரமாகனும்

ஆண்: அடியே வெடியே
அல்லிக் கொடியின் மடியே உன்ன
அள்ளி வாசம் பாக்க வரட்டா

ஆண்: புரியா வலியே செல புலியே புலியே
உன்மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா

ஆண்: துப்பாக்கி தப்பாய்க் கொண்ட
சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே
நட்பாகி நேசம் காட்டும்
குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே

ஆண்: அடிமைகள் ரத்த்திற்கெல்லாம்
வெப்பம் தந்த வீரத் தீயே
அதிகார வர்கத்துக்கு அறைகூவல் நீயே

ஆண்: எம் தாய் மண்மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண்: எம் தாய் மண்மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண்: பாரா
வருவது ஓராட் படையா
வீரா
விழுப்புண் அலங்காரா

ஆண்: மாறா
ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா
வரிப்புலி வரலாறா

Other Songs From Indian 2