ஒரு கல் ஒரு கண்ணாடி

Oru Kal Oru Kannadi Lyrics in Tamil
Movie: Siva Manasula Sakthi(சிவா மனசுல சக்தி)
Music: Anirudh Ravichander
Singer: Yuvan Shankar Raja
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Oru Kal Oru Kannadi Lyrics in Tamil

ஆண்: ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

ஆண்: கண்கள் ரெண்டில்
காதல் வந்தால் ஹோ
கண்ணீர் மட்டும்
துணை ஆகுமே ஓ ஹோ ஹோ

ஆண்: ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

ஆண்: திமிருக்கு மறுப்பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே

ஆண்: தீயென புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே
தொிந்தே சுகமாய் எறிந்தேனே

ஆண்: கடும் விஷத்தினை எடுத்துக் குடித்தாலும்
அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதைதானே

ஆண்: ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

ஆண்: உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்

ஆண்: புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்

ஆண்: உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல

ஆண்: ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

Other Songs From Siva Manasula Sakthi Movie