Oororam Kammakarai Lyrics in Tamil
ஆண்: ஊரோரம் கம்மாக்கரை
வேறாரும் பார்க்கவில்லை
ஊரோரம் கம்மாக்கரை
வேறாரும் பார்க்கவில்லை
மாந்தோப்பு பக்கத்துல
பொண்ணு இருக்கா வெக்கத்துல
பெண்: கூட்டான்சோறு ஆக்கித்தரவா
உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா
கூட்டான்சோறு ஆக்கித்தரவா
உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா
ஆண்: ஊரோரம் கம்மாக்கரை
வேறாரும் பார்க்கவில்லை
பெண்: வைகைக்கரை ஓரத்துல
பைய பைய என்ன தொட்டு
மையலுல பாய விரிச்ச
மாய் போட்டு மையலுக்கு பாய விரிச்ச
பெண்: வைகைக்கரை ஓரத்துல
பைய பைய என்ன தொட்டு
மையலுல பாய விரிச்ச
மாய் போட்டு மையலுக்கு பாய விரிச்ச
ஆண்: வெயிலுக்கு தாகமுன்னு
நிழலுக்கு வந்த என்ன
வெயிலுக்குள் அடைச்சு வெச்ச
கண்ணால ஜெயிலுக்குள் அடைச்சு வெச்ச அம்மாடி
பெண்: சொக்குபொடி போட பாக்குற
ஆத்தாடி எக்குத்தப்பா ஏதோ கேக்குற மாமோய்
ஆண்: ஊரோரம் கம்மாக்கரை
வேறாரும் பார்க்கவில்லை
பெண்: சால மலை காட்டுக்குள்ளே
சார மழை கூடுதுன்னு
சாக்கு சொல்லி கைய புடுச்ச
பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச
பெண்: சால மலை காட்டுக்குள்ளே
சார மழை கூடுதுன்னு
சாக்கு சொல்லி கைய புடுச்ச
பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச
ஆண்: நாத்து நட போகையில
ஆத்தங்கரை ஓரம் நின்னு
பார்த்து பார்த்து மெல்ல சிரிச்சா
சிரிச்சு ஏக்கத்துல கிறங்க வெச்சா அம்மாடி
பெண்: ஓடை தண்ணி போல பாயுற
ஆத்தாடி வாட காத்து போல வீசுற மாமோய்
ஆண்: ஊரோரம் கம்மாக்கரை
வேறாரும் பார்க்கவில்லை
மாந்தோப்பு பக்கத்துல
பொண்ணு இருக்கா வெக்கத்துல
பெண்: கூட்டான்சோறு ஆக்கித்தரவா
உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா
பெண்: ஊரோரம் கம்மாக்கரை
வேறாரும் பார்க்கவில்லை
