நிழலினை நிஜமும்

Nizhalinai Nijamum Lyrics in Tamil
Movie: Raam(ராம்)
Music: Yuvan Shankar Raja
Singers: Vijay Yesudas and Yuvan Shankar Raja
Lyricist: Snehan(சினேகன்)

Nizhalinai Nijamum Lyrics in Tamil – Snehan

ஆண்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

ஆண்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

ஆண்: நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க
விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூக்கும் அலையும் கடலில்தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா

ஆண்: உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்

ஆண்: ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா

ஆண்: திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகி போச்சு
சரி செய்ய வழியும் தெரியலம்மா

ஆண்: சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா

ஆண்: என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

ஆண்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

Other Songs From Raam Movie