Ninaithu Ninaithu Parthen Lyrics in Tamil
ஆண்: நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
ஆண்: எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
ஆண்: அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா
ஆண்: தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா
ஆண்: உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
ஆண்: நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
ஆண்: பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
ஆண்: பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
ஆண்: தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்