நெஞ்சுக்குள் பெய்திடும்

Nenjukkul Peidhidum Lyrics in Tamil
Movie: Vaaranam Aayiram(வாரணம் ஆயிரம்)
Music: Harris Jayaraj
Singers: Hariharan, Devan Ekambaram and V.V. Prassanna
Lyricist: Thamarai(தாமரை)

Nenjukkul Peidhidum Lyrics in Tamil

ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஆண்: நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஆண்: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஆண்: ஏதோ ஒன்று என்னை ஈா்க்க
மூக்கின் நுனி மா்மம் சோ்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

ஆண்: நீ நின்ற இடமென்றால்
விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

ஆண்: என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

ஆண்: இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே

குழு: போகாதே

ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை ஹோ

ஆண்: நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஆண்: தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
பெண் குழு: தூக்கிச் சென்றாய்
ஆண்: ஏக்கங்களை தூவிச் சென்றாய்

ஆண்: உன்னை தாண்டி போகும் போது
பெண் குழு: போகும் போது
ஆண்: வீசும் காற்றின் வீச்சு வேறு

ஆண்: நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

ஆண்: காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை

ஆண்: என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

பெண் குழு: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

குழு: நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஆண்: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி