
Motta Paiyaa Lyrics in Tamil
பெண்: மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
பெண்: மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
கெட்ட பையன் கெட்ட பையன்
என் உசுர தொட்ட பையன்
ஆண்: இந்த உறவு கெடைக்குமா
நெஞ்சம் தவிச்சதே
அந்த வரமும் இன்றுதான்
கையில் கெடச்சதே
பெண்: நம் காதல் ஜெய்க்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே
ஆண்: உன் பாத கொலுசு மோதித் தெறிக்கும்
நானும் ரசித்து நாளைக் களிப்பேனே
பெண்: மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
பெண்: நெஞ்சுக்குள்ளே இருந்தது
வார்த்தைகளாய் விழுந்தது
பெண்: இந்த நொடி இந்த நொடி
மண்ணிலே சொர்க்கம் கண்டேன்
என்னவனை தந்ததற்கு
சாமிக்கு நன்றி சொன்னேன்
பெண்: ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும்
என் உடல் அதிர உயிர் அதிர
உன்னை நினைத்து என்னை மறந்தேனே
ஆண்: உன்னைவிட அழகிகள் எத்தனையோ உலகிலே
இருக்கலாம் அது எல்லாம் எனக்கழகு இல்லை
சிரிக்கும் உன் சிரிப்புதான் அழகுகளின் எல்லை
ஆண்: தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால்
நான் மதம் மறந்து உனதருகில்
இடம் பிடிக்க வந்து தவிப்பேனே
பெண்: மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
கெட்ட பையன் கெட்ட பையன்
என் உசுர தொட்ட பையன்
ஆண்: இந்த உறவு கெடைக்குமா
நெஞ்சம் தவிச்சதே
அந்த வரமும் இன்றுதான்
கையில் கெடச்சதே
பெண்: நம் காதல் ஜெய்க்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே
ஆண்: உன் பாத கொலுசு மோதித் தெறிக்கும்
நானும் ரசித்து நாளைக் களிப்பேனே
பெண்: மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்