
Megamo Aval Lyrics in Tamil
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
ஆண்: அள்ளி சிந்தும் அழகின் துளிகள்
உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம்
எதையோ உலரும்
ஆண்: இல்லை அவளும் என்றே உணரும்
நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில்
கண்ணீர் மலர்கள் உதிரும்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
ஆண்: வானவில் தேடியே
ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில்
என் கண்களை இழந்தேன்
ஆண்: என் நிழலும் என்னையே உதறும்
நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா
கவிதை உடையும்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
ஆண்: உன் ஞாபகம் தீயிட
விறகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில்
அரியாசனம் செய்கிறேன்
ஆண் குழு: இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும் கரையும் வளரும்
உன் நினைவும் அது போல்
மனதை குடையும்
ஆண்: இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலாவும் கரையும் வளரும்
உன் நினைவும் அது போல்
மனதை குடையும்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்
தேன் அலை சுழல்
தேவதை நிழல்
ஆண்: அள்ளி சிந்தும் அழகின் துளிகள்
உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில்
இதயம் எதையோ உலரும்
ஆண்: இல்லை அவளும் என்றே உணரும்
நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில்
கண்ணீர் மலர்கள் உதிரும்
ஆண்: இல்லை அவளும் என்றே உணரும்
மேகமோ அவள்
நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில்
மாய பூ திரள்
கண்ணீர் மலர்கள் உதிரும்
தேவதை நிழல்
ஆண்: மேகமோ அவள்
மாய பூ திரள்