மழைத்துளி மழைத்துளி

Mazhai Thuli Lyrics in Tamil
Movie: Sangamam(சங்கமம்)
Music: A. R. Rahman
Singers: Hariharan and M. S. Viswanathan
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Mazhai Thuli Lyrics in Tamil

ஆண்: மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி
வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்

ஆண்: மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி
வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்

ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க

ஆண்: என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்

ஆண்: என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா
உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்

ஆண்: நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும்

ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க

ஆண்: மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி
வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்

ஆண்: மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி
வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்

ஆண்: தண்ணியில மீன் அழுதா
கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல

ஆண்: என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும்
வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே
சலங்கை சலங்கை பாடுமே

ஆண்: மனமே மனமே
சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே
இமையே தீயும்போதும் கலங்காதிரு

ஆண்: நதி நதி அத்தனையும்
கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும்
பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி
உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

ஆண்: மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி
வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்

ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க

ஆண்: மழைக்காகத்தான் மேகம்
அட கலைக்காகத்தான் நீயும்
உயிா் கலந்தாடுவோம் நாளும்
மகனே வா

ஆண்: நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு
மகனே வா மகனே வா

ஆண்: ஊருக்காக ஆடும் கலைஞன்
தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்

ஆண்: புலிகள் அழுவது ஏது
அட பறவையும் அழ அறியாது
போா்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது

ஆண்: மகனே மகனே
காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க

ஆண்: என் காலுக்கு சலங்கையிட்ட
உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா
நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்

ஆண்: நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்
நீ உண்டு உண்டு என்ற போதும்
அட இல்லை இல்லை என்றபோதும்

ஆண்: சபை ஆடிய பாதமிது
நிக்காது ஒருபோதும்

ஆண்: மழைத்துளி மழைத்துளி
மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி
வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்