மாரியம்மா மாரியம்மா

Mariyamma Mariyamma Song Lyrics in Tamil
Movie: Karakattakkaran(கரகாட்டக்காரன்)
Music: Ilaiyaraaja
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra
Lyricist: Gangai Amaran(கங்கை அமரன்)

Mariyamma Mariyamma Song Lyrics in Tamil

ஆண்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண்: தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங்கரகம்
பெண்: நிலையாக நிலைக்க வைக்கும்
நினச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

ஆண்: உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
பெண்: காவல் நீதான் காளியம்மா

ஆண்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண்: மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா
ஆண்: வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா

பெண்: இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழித் துணையும் நீதானே
ஆண்: தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே

பெண்: சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு

ஆண்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
பெண்: கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண்: வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்
பெண்: நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்

ஆண்: சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பெண்: பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே

ஆண்: சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்

பெண்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
ஆண்: கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண்: தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
ஆண்: நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

பெண்: உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
ஆண்: காவல் நீதான் காளியம்மா

ஆண் மற்றும் பெண்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா