Madura Kulunga Kulunga Lyrics in Tamil
பெண்: கல்லு மலைமேல கல்லுருட்டி
அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு
மதுரை கோபுரம் தெரிய கட்டி
நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி
ஆண்: மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
ஆண்: இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
குழு: மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
குழு: இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
ஆண்: வந்தாரை வாழ வச்ச ஊரு
புயல் வந்தாலும் அசையாது பாரு
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு கேளு
குழு: அண்ணே வந்தாரை வாழ வச்ச ஊரு
புயல் வந்தாலும் அசையாது பாரு
எங்க தென்னாட்டு சிங்கம் வந்து
முன்னேற்றி கொண்டு வந்த
பொன்னான கதை உண்டு கேளு
ஆண்: அண்ணே பொன்னான
கதை உண்டு கேளு
குழு: ஊரு மகிழ்ந்திடனும்
நாடு செழித்திடணும்
சாமிய கும்பிட்டுக்கோ
பூமி விளையும் அப்போ
குழு: ஊரு மகிழ்ந்திடனும்
நாடு செழித்திடணும்
சாமிய கும்பிட்டுக்கோ
பூமி விளையும் அப்போ
ஆண்: கோயில் குளம்தான் ஊருக்கு அழகு
கோயில் இல்லா ஊர விலக்கு
குழு: கோயில் குளம் தான் ஊருக்கு
அழகு கோயில் இல்லா ஊர விலக்கு
குழு: இந்த மண்ணு மணக்குற மல்லிக பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
பெண்: தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
குழு: தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
பெண்: அம்மா வீரமாகாளி
எங்க அழகு வீரமாகாளி
அம்மா வீரமாகாளி
எங்க அழகு வீரமாகாளி
அவள் ஆனந்தமாய் கோவில் கொண்டால்
அன்னை வீரமாகாளி
குழு: தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
பெண்: சுப்ரமணியபுரம் காத்தவளே
எங்க வீரமாகாளி
சுப்ரமணியபுரம் காத்தவளே
இந்த வீரமாகாளி
அந்த சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி
அந்த சுந்தரராஜன் தங்கை அவ
அம்மா வீரமாகாளி
குழு: தன்னே நன்னே நானே தன நானே
நன்னே நானே தன்னே நன்னே நானே
தன நானே நன்னே நானே
குழு: இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்
குழு: மதுரை குலுங்க குலுங்க
நீ நையாண்டி பாட்டு பாடு
புழுதி பறக்க பறக்க
நீ போடாத ஆட்டம் போடு
குழு: இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ
நம்ம மனச எடுத்து சொல்லும்
வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம்
இந்த தேர இழுத்து செல்லும்