Vaartha Onnu Song Lyrics in Tamil
ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து
வெட்ட பாக்குதே
—பின்னணி இசை—
ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து
வெட்ட பாக்குதே
ஆண்: நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு
தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ
உப்பா போனதே
ஆண்: நீ எனக்கு சொந்தமில்லை
என்று சொன்ன உடன்
மனசு வெந்து போச்சே
ஆண்: என் நிழலில் கூட இப்போ
ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே
—பின்னணி இசை—
ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து
வெட்ட பாக்குதே
—பின்னணி இசை—
ஆண்: உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது விளங்கல
கலங்கரை விளக்கமே இருட்டிலே
ஆண்: பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல துக்கத்த நான் தெளிச்சிட்டேன்
அன்புல அரளிய வெதைச்சுட்டேன்
ஆண்: அட்ட கத்தி தான்னு நான்
ஆடி பாத்தேன் விளையாட்டு
வெட்டு கத்தியாக அது மாறி
இப்போ வினையாச்சு
ஆண்: பட்டாம்பூச்சி மேல ஒரு
கொட்டாங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்தில கண்ண
இப்போ காணலியே
ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
—பின்னணி இசை—
ஆண்: படைச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்துல மாட்டி இறுக்குது
பகையில மனசுதான் பதறுது
ஆண்: கனவுல பெய்யிற மழையிது
நான் கை தொடும் போது மறையுது
மேகமே சோகமா உறையுது
ஆண்: சூரத்தேங்காய் போல என்னை
சுக்கு நூறா உடைக்காதே
சொக்கப் பனை மேல
நீ தீய அள்ளி வீசாதே
ஆண்: எட்டி எட்டிப் போகையிலே
ஈரக்குலை வேகிறதே
கூட்டாஞ்சோறு ஆக்கையில
தீ காத்து வீசியதே
ஆண்: வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து
வெட்ட பாக்குதே
ஆண்: நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு
தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ
உப்பா போனதே
ஆண்: நீ எனக்கு சொந்தமில்லை
என்று சொன்ன உடன்
மனசு வெந்து போச்சே
ஆண்: என் நிழலில் கூட இப்போ
ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே
—பின்னணி இசை—