Uyirin Uyirae Lyrics in Tamil
Movie: Kaakha Kaakha(காக்க காக்க)
Music: Harris Jayaraj
Singers: KK and Suchitra
Lyricist: Thamarai(தாமரை)

Uyirin Uyirae Lyrics in Tamil

ஆண்: உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்

ஆண்: நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்

ஆண்: நேரம் கூட எதிரி ஆகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்

ஆண்: உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன் முழுதும் வேர்கின்றேன்

ஆண்: சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே

ஆண்: நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்

ஆண்: உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்

ஆண்: இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே

ஆண்: பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ நீ நீ

ஆண்: உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்

ஆண்: நகரும் நெருப்பாய் கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிகொண்டாய்

ஆண்: நேரம் கூட எதிரி ஆகிவிட
யுகங்கள் ஆக வேடம் மாறிவிட
அணைத்து கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
ஏனோ சென்றாய் ஏ ஏ

Added by

Padalvarigal Team

SHARE