Movie: Chithha(சித்தா)
Music: Santhosh Narayanan
Singers: Santhosh Narayanan and Dhvani Kailas
Lyricist: Vivek(விவேக்)

Unakku Thaan Lyrics in Tamil – Vivek

அமுத கடல் உனக்குத்தான்
ஆறா மழை உனக்குத்தான்
நீங்கா நிழல் உனக்குத்தான்
நீ கண்மணி எனக்குத்தானே

பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

சந்திக்கா மலர் உனக்குத்தான்
கண்டிக்கா மொழி உனக்குத்தான்
சிந்திக்கா நொடி உனக்குத்தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே

வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னாடி
நான் நடத்தி வைப்பேன்

வாழ்ந்தாலும்
தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில்
வாழ வைத்தேனே

பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பாத்து பாத்து
ஆயுள் கூடும் எனக்கு

புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு

பெ : என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா

அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவுப்பும்
இன்றி சுடுவாளே

நீயும் தும்மிடுடி தும்மிடுடி
ஆயுசு நூராக
என் உயிர் உன்னோட
பத்திர சொத்தாக

என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT