Movie: Thaamirabharani(தாமிரபரணி)
Music: A. R. Rahman
Singers: Hariharan and Bhavatharini
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Thaliye Thevai Illai Song Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: தாலியே தேவயில்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவயில்ல
நீதான் என் சரிபாதி

ஆண்: உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே

ஆண்: அடி சிறுக்கி நீதான் என் மனசுக்குள்ள
அடகிறுக்கி நீதான் என் உசுருக்குள்ள
உன்ன நெனச்சு நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள
என்ன உருக்கி

பெண்: தாலியே தேவயில்ல
நான்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவயில்ல
நீதான் என் சரிபாதி

—பின்னணி இசை—

ஆண்: பத்து பவுனு பொன்னெடுத்து
கங்குக்குள்ள காய வச்சு
தாலி ஒன்னு செய்யப்போறேன் மானே மானே

பெண்: நட்டநடு நெத்தியில
ரத்த நிற பொட்டு வச்சு
உன் கைபுடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே

ஆண்: அடி ஆத்தி அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்

பெண்: இது என்ன இது என்ன
கனவுல கனவுல குழப்பம்

ஆண்: இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான்

பெண்: அட கிறுக்கா
நான் உனக்காக பொறந்தவடா
அட கிறுக்கா
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு ஓஓஓ ஓஓஓ

ஆண்: தாலியே தேவயில்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவயில்ல
நீதான் என் சரிபாதி

—பின்னணி இசை—

பெண்: எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு கடிக்கப்போறேன்
நானே நானே

ஆண்: ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுக்குள்ள நிக்க வச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே

பெண்: அடி ஆத்தி அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்குது உன்ன

ஆண்: இது என்ன இது என்ன
நான் எத்தனதடவ சொன்னேன்

பெண்: இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோஹோஓ

ஆண்: அடி சிறுக்கி
நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓஓஓ ஓஓஓ

பெண்: தாலியே தேவயில்ல
நான்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவயில்ல
நீதான் என் சரிபாதி

—பின்னணி இசை—

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT