Movie: Iru Mugan(இருமுகன்)
Music: Harris Jayaraj
Singers: Ramya NSK, Ranina Reddy and N.C Karunya
Lyricist: Thamarai(தாமரை)

Oh Maya Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே
இந்நாள் வாழ்விலே அடடா டாடடா
ஆஹா வானிலே பாதை ஏறுதே
பனியாய் மாறுதே அடடா டாடடா

ஆண்: கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே
வாா்த்தை என்பதே இனிமேல் பாரமே
ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே
பக்கம் என்பதும் இங்கே தூரமே

ஆண்: ஏழேழு பிறவிகள் உனை தொடா்ந்து வந்தேன்
ஏனடி என் தேடலை அறியாமல் போனாய்
வான் மீது எனை உனக்கென மினுக்கியவன்
ஏனடி என் மின்மினியை பாா்க்காமல் போனாய்

ஆண்: ஓ மாயா மேகம் நீயா
ஓஓ மாயா மோகம் தீயா

ஆண்: கண்ணே காதலி காதல் மாா்வலி
காயம் ஆவதால் கண்ணை தாழ்த்து நீ
முத்தம் நீயடி சத்தம் நானடி
நாணம் வந்ததால் நகரும் வான்மதி

ஆண்: உன்னை எண்ணியே நாட்கள் போனதே
ஊடல் செய்வதே உலகம் ஆனதே
காலம் கூடுதே கைகள் சேருதே
கைகள் சோ்வதே கனவாய் தோன்றுதே

ஆண்: உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை
பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பாா்த்தேன்
இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும்
நான் விழித்தால் நீ இருப்பாய் என்னை அள்ளி சோ்ப்பேன்

ஆண்: ஓ மாயா மேகம் நீயா
ஓஓ மாயா மோகம் தீயா

—பின்னணி இசை—

பெண்: வானின் நீளமே கடலின் ஆழமே
காற்றின் சீழமே காதல் ஆகுமே
நானும் நீயுமே வாழும் வாழ்விலே
காலம் தாண்டியும் காதல் நீளுமே

பெண்: நானும் மாறினேன் நீதான் காரணம்
கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம்
என்னை உன்னிடம் தந்தேன் சீதனம்
ஆடும் என் மனம் அட இன்னும் ஆனந்தம்

பெண்: உன் வீட்டில் இனி எனக்கொரு அறை இருக்கும்
நான் இருக்கும் நாள் வரைக்கும் அதில் நீயும் இருப்பாய்
உன் தோளில் மலா் கொடி இன்று படா்ந்திருக்கும்
நீ தெளிக்கும் நீா் இனிக்கும்

பெண்: ஓ ஆஹா மேகம் நீயா
ஓஓ ஆஹா மோகம் தீயா

ஆண்: ஓ மாயா மேகம் நீயா
ஓஓ மாயா மோகம் தீயா

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT