Movie: Majunu(மஜ்னு)
Music: Harris Jayaraj
Singers: Bombay Jayashree and Harish Raghavendra
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Mudhal Kanavae Lyrics in Tamil

பெண்: முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

—பின்னணி இசை—

பெண்: முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

ஆண்: முதற்கனவு முதற்கனவு
மூச்சுள்ள வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா

ஆண்: கனவல்லவே கனவல்லவே
கண்மணி நானும் நிஜம் அல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல்
சாகாது அல்லவா

பெண்: முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

—பின்னணி இசை—

ஆண்: எங்கே எங்கே நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்துவிட்டேன்

பெண்: இங்கே இங்கே நீ வருவாய் என்று
சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்

ஆண்: தொலைந்த என் கண்களை
பார்த்ததும் கொடுத்துவிட்டாய்
கண்களை கொடுத்து
இதயத்தை எடுத்துவிட்டாய்

பெண்: இதயத்தை பறிதத்தற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண்: முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

—பின்னணி இசை—

பெண்: ஊடல் வேண்டாம்
ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல
உயிரிலே உயிரிலே கலந்துவிடு

ஆண்: கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே உறங்கி விடு

பெண்: நிலா வரும் நேரம்
நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே
வர சொல்லு தென்றலை

பெண் குழு: வர சொல்லு தென்றலை

ஆண்: தாமரையே தாமரையே
நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல
வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால்
தொடுவேன் தொடுவேன்

பெண்: சூரியனே சூரியனே
தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே
விரல் நீட்டி திறக்கிறாய்

பெண்: மரக்கொத்தியே மரக்கொத்தியே
மனதை கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண் குழு: தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண்: தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண் குழு: தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண்: நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT