Malarodu Malaringu Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண் குழு: மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
பெண் குழு: மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
ஆண் மற்றும் பெண் குழு: வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
பெண்: மனதோடு மனம் சேரட்டும்
ஆண் மற்றும் பெண் குழு: மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
ஆண் மற்றும் பெண் குழு: துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்
—பின்னணி இசை—