Karupaana Kaiyale Song Lyrics in Tamil
பெண்: கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
—பின்னணி இசை—
பெண்: கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா
ஆண்: சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா
இவள் காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா ஆஹான்
பெண்: கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
—பின்னணி இசை—
பெண்: வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு
உன்னை பாா்த்தேனே
அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே
ஆண்: தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
பெண்: ஆத்துக்குள்ள மீன் பிடிக்க
நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க
பாய்ச்சல் புரியணும் அய்யா
ஆண்: சிவப்பாக
பெண்: ஆஹா
ஆண்: இருப்பாளே
பெண்: ஆமா
ஆண்: சிவப்பாக ஆ
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
—பின்னணி இசை—
ஆண்: ஓ உருக்கி வச்ச இரும்பு போல உதடு உனக்கு
அத நெருங்கும் போது கரண்டு போலே ஷாக்கு எனக்கு
பெண்: ஹே வெட்டும் புலி தீப்பெட்டிப் போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும்போது பத்திக்கிச்சி மனசு எனக்கு
ஆண்: பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு
யம்மா ஆத்தா ஹே ஹேய்
பெண்: கருகரு கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
ஆண்: இவ காதல் இப்போ ஜோலியதான் காட்டுதம்மா
பெண்: ஹா ஹா கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
ஆண்: ஹே
பெண்: பூக்குதம்மா
ஆண் மற்றும் பெண்: நன நன நானனனா
பெண்: நன நன நானனனா