Enjaami Thandhaane Song Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: நட்டு வெச்ச நாத்தையெல்லாம்
உத்து உத்து பாக்குதாம்மா
கட்டி வெச்ச காளைமாடு மூ மூ
ஆண்: பச்சரிசி பொங்கவெச்சு
பக்குவம்மா கொழம்பு வெச்சு
கூப்புடுது சொந்த ஊரு ஓ ஓ
ஆண்: எஞ்சாமி தந்தானே
எல்லாமே எஞ்சாமி தந்தானே
எனக்கும் தந்தானே
எல்லாமே உனக்கும் தந்தானே
ஆண்: ஏ எஞ்சாமி தந்தானே
எல்லாமே எஞ்சாமி தந்தானே
தென்னையும் தந்தானே காத்தாரா
தின்னையும் தந்தானே
ஆண்: நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு
சொன்னது யாருன்னு கூரு புள்ளா
சாமிக்கு நீ வேறு நா வேறில்ல
பூமிக்கு யாருமே பாரமில்ல
ஆண்: ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான் விளைய வச்சானே
ஆண்: ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான் விளைய வச்சானே
ஆண்: எஞ்சாமி தந்தானே
எல்லாமே எஞ்சாமி தந்தானே
எனக்கும் தந்தானே
எல்லாமே உனக்கும் தந்தானே
—பின்னணி இசை—
ஆண்: ஏ கள்ளம் கபடம்
இல்லா நெஞ்சு இருக்கு
என் கண்ணுக்குட்டிக்கும்
சோறு தண்ணி பங்கு இருக்கு
ஆண்: ஏ தன்னந்தனியா ஏங்க என்ன இருக்கு
என் சொந்த பந்தம ஓரே இங்க இருக்கு
ஆண்: தார தப்பட்ட தட்டுங்கடியே
நம்ம ஊரு கும்மிய கொட்டுங்கடியே
மஞ்ச குங்குமம் பூசிக்கிட்டு
மல்லி பூவோட சுத்துங்கடியே
ஆண்: நான் சொல்ற சங்கதி கேட்டுக்குய்யா
உன் காதுல வாங்கி நீ போட்டுக்கய்யா
சொந்த மண்ணையும் பெண்ணையும் கும்பிடனும்
நம்ம பாட்டனும் பூட்டனும் சொன்னதைய்யா
ஆண்: எஞ்சாமி ஏ எஞ்சாமி
எது வந்தாலும் போனாலும்
இந்த மண் தானே எஞ்சாமி
ஆண்: ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான் விளைய வச்சானே
ஆண்: ஏட்ட வச்சான் எழுத வச்சான்
பாட்ட வச்சான் படிக்க வச்சான்
மேகம் வச்சான் மழைய வச்சான் விளைய வச்சானே
ஆண்: ஏ எஞ்சாமி தந்தானே
எல்லாமே எஞ்சாமி தந்தானே
எனக்கும் தந்தானே
எல்லாமே உனக்கும் தந்தானே
ஆண்: ஏ எஞ்சாமி தந்தானே
எல்லாமே எஞ்சாமி தந்தானே
தென்னையும் தந்தானே காத்தாரா
தின்னையும் தந்தானே
ஆண்: நிம்மதி நெஞ்சுக்கு தூரமுன்னு
சொன்னது யாருன்னு கூரு புள்ளா
சாமிக்கு நீ வேறு நா வேறு இல்ல
பூமிக்கு யாருமே பாரமில்ல
—பின்னணி இசை—