
Kodi Kodi Minnalgal Lyrics in Tamil
ஆண்: கோடி கோடி மின்னல்கள் 
ஓடி வந்து பாயுதே 
ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: மூச்சிலே புது வாசனை 
இது ஏனம்மா
இளைய மனதில் காதல்
பிறந்த நேரமா
ஆண்: கோடி கோடி மின்னல்கள் 
ஓடி வந்து பாயுதே 
ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: சாரல் விழும் நேரம் 
வானவில்லை போலே 
தோன்றிடும் அழகான காதல்
ஆண்: ஓசை இன்றி வந்து 
உள்ளுக்குள்ளே வாழும் 
இளமையின் சங்கீதம் காதல்
ஆண்: ரயிலின் ஓசை இங்கே 
சுக நாதஸ்வரங்களாக
இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா
ஆண்: பழகு பாதம் பார்த்து
அவள் சுப்ரபாதம் பாட 
சினுங்கும் கொலுசு ஸ்ருதி சேர்க்குமா
ஆண்: கோடி கோடி மின்னல்கள் 
ஓடி வந்து பாயுதே 
ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: ஓர விழிப்பார்வை
தீபங்களை ஏற்றி 
வைத்ததோ நெஞ்சோடு இன்று
ஆண்: தென்றல் என வந்து 
தொட்டுச் சென்ற காதல் 
கலந்தது மூச்சோடு இன்று
ஆண்: காதல் என்னும் வார்த்தை 
அது வார்த்தை அல்ல வாழ்க்கை 
வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
ஆண்: இணைய வேண்டும் மனது 
இது இறைவன் செய்த முடிவு 
மாற்றிக் கொள்ள மாலை வேண்டுமா
ஆண்: கோடி கோடி மின்னல்கள் 
ஓடி வந்து பாயுதே 
ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: ஓடி வந்த வார்த்தைகள்
ஓசை இன்றி தேயுதே
ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: மூச்சிலே புது வாசனை 
இது ஏனம்மா
இளைய மனதில் காதல்
பிறந்த நேரமா
ஆண்: கோடி கோடி மின்னல்கள் 
ஓடி வந்து பாயுதே 
ஏனடி ஏனடி ஏனடி






