Kavithayae Theriyuma Lyrics in Tamil
ஆண்: கவிதையே தெரியுமா
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா
உனக்காகவே நானடி
ஆண்: இமை மூட மறுக்கின்றதே
ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு: காதலே
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா
பெண்: குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
ஆண்: மனதை பறித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
பெண்: ஊஞ்சல் மழை மேகம்
அருகினில் வந்து
என்னைத் தாலாட்டுதே
ஆண்: வானம் காணாத
வெண்ணிலவொன்று
மோகப் பாலூட்டுதே
பெண்: நாணம் பொய்
நீட்டுதே
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
கவிதையே தெரியுமா
ஆண்: தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததுமி தகிட ததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
ஆண்: உயிரில் இறங்கி வரவா
உன் உடலில் கரைந்து விடவா
பெண்: உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
ஆண்: புடவையாய் மாறி
பொன் உடல் மூடி
உன்னுடன் வாழவா
பெண்: இருவரின் ஆடை
இமைகளே ஆக
இரவை நாம் ஆளவா
ஆண்: வேர்வை குடை தேடவா
ஆ ஆ ஹா ஹா
ஆண்: கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடி
பெண்: இதயமே தெரியுமா
உனக்காகவே நானடா
ஆண்: இமை மூட மறுக்கின்றதே
குழு : காதலே
ஆண் மற்றும் பெண்: இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு : காதலே