Kannaana Kanne Lyrics in Tamil
ஆண்: கண்ணான கண்ணே ஏ நீ கலங்காதடி
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
நீ கலங்காதடி நீ கலங்காதடி
ஆண்: யார் போனா யார் போனா என்ன
யார் போனா யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
ஆண்: ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலைய கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
ஆண்: கிடைச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
ஆண்: குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும்
வழக்கம் தானடி
ஆண்: கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
ஆண்: என் விரல் இடுக்குல
உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு
இறுக்கி நா புடிக்கணும்
ஆண்: நான் கண்ண தொறக்கையில்
உன் முகம் தெரியனும்
உசுருள்ள வரைக்குமே
உனக்கென்ன புடிக்கணும்
ஆண்: கடல் அலை போல
உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
ஆண்: கடல் மண்ண போல
உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
ஆண்: கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
ஆண்: ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலைய கூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
ஆண்: நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஒட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிர் வாழுரேண்டி
ஆண்: பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி
