Kaalathukkum Nee Venum Lyrics in Tamil – Thamarai
ஆண்: என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல்
நானும் நீயும் வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா
பெண்: நீ வந்த நிழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
பெண்: இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ ஹோ வருவேனே பின்னோடு
ஆண்: ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
ஆண்: உன் அன்பு என்னும் பானம்
என் உசுர் வர வேணும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேணும்
ஆண்: கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
பெண்: என்ன தர உன்ன விட
நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும்
வேற வேற இல்ல
உன்னோடு நான் இப்பயேதான்
ஆண்: உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
பெண்: ஓ தங்க தோடு பேசும் காதோரம்
ஆண்: ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
பெண்: ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
என் நெஞ்சு கொண்டாடும்
ஆண்: ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
ஆண்: உன் அன்பு என்னும் பானம்
என் உசுர் வர வேணும்
உன் மூச்சு காற்றில்
நான் மூழ்கி மாய்ந்திட வேணும்
ஆண்: கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்
பெண்: ஒட்டு கேட்கும் காத்தே
கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்னு நிக்கும்
என்ன தொட்டு போவாயோ
ஆண்: என் எண்ணம் போலே
வண்ணம் கண்டேன்
இன்னாள் கனாக்களை
நிகழ்த்தி பார்க்கும் முதல்நாள்
பெண்: உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேணும்
நான் முன்னே பின்னே
சூடாத முல்லை பூவும் நீ
பெண்: தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால்
பாகாக உருகிடுதே
பெண்: ஓ இன்னும் நூறு ஆண்டு
நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும்
நம் ஆசை வாழும்
ஆண் மற்றும் பெண்: உன் அன்பு என்னும் பானம்
என் உசிர் வர வேணும்
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி
மாய்ந்திட வேணும்
ஆண் மற்றும் பெண்: கண்கள் நான்கும் பார்த்தும்
பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்