எனைக் காணவில்லையே

Ennai Kaanavillaiye Lyrics in Tamil
Movie: Kadhal Desam(காதல் தேசம்)
Music: A. R. Rahman
Singers: S. P. Balasubrahmanyam, O. S. Arun and Rafee
Lyricist: Vaali(வாலி)

Ennai Kaanavillaiye Lyrics in Tamil – Vaali

ஆண்: அன்பே அன்பே
அன்பே அன்பே

ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே

ஆண்: நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே அன்பே

ஆண்: நடை போடும் பூங்காற்றே
பூங்காற்றே

ஆண்: வா வா

ஆண் குழு: என் வாசல்தான்

ஆண்: வந்தால்

ஆண் குழு: வாழ்வேனே நான்

ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே

ஆண்: ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

ஆண்: நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே
நீர்கூடத் தீதான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே

ஆண்: நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே அன்பே

ஆண்: நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

ஆண்: மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே

ஆண்: நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே அன்பே

ஆண்: நடை போடும் பூங்காற்றே
பூங்காற்றே

ஆண்: வா வா

ஆண் குழு: என் வாசல்தான்

ஆண்: வந்தால்

ஆண் குழு: வாழ்வேனே நான்

ஆண்: எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே

Other Songs From Kadhal Desam Movie