En Iniya Thanimaye Lyrics in Tamil
ஆண்: என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
ஆண்: புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு
ஆண்: மழை வீழும் இள மாலையோ
இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு
ஆண்: உன்னோடு மட்டும்தான்
என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்
மெய் பேசும் மனது
ஆண்: மனிதரின் மொழி கேட்டு கேட்டு
இதயம் பழுதாய்
உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய்
ஆண்: என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
ஆண்: அலை மோதும் கரை மீதிலோ
மணல் பாதம் சுடும் போதிலோ
உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு
ஆண்: கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு
ஆண்: என் தாயின் கருவில்
என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்
என்னோடு இருப்பாய்
ஆண்: உறவுகள் வந்து சேரும் நீங்கும்
நீதான் நிலையாய்
அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன்
முதல் முறையாய்
ஆண்: என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
ஆண்: இதுவரை கற்கா கலைகள் எல்லாம்
உன்னுடன் கற்கும் வேளையிலே
என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்
ஆண்: இதுவரை காணா காட்சிகளை
உன்னுடன் காணும் வேளையிலே
எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்
ஆண்: ஒரு சிலர் என்னை நெருங்க
என்னிடம் பேச தொடங்க
சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய்
ஆண்: கவலைகள் என்னை வருத்த
உன்னிடம் என்னை துரத்த
உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்
ஆண்: எனை துயிலென அணைத்திடு தனிமையே
என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே
கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே
தனிமையே
ஆண்: என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே
ஆண்: என் இனிய தனிமையே ஓஹோ
என் இனிய தனிமையே
என் இனிய தனிமையே