அஞ்சு வண்ண பூவே

திரைப்படம்: தக் லைஃப்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
பாடகர்: சாருலதா மணி
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா

Anju Vanna Poove Lyrics in Tamil

பெண்: அஞ்சு வண்ண பூவே
தாலேலோ லாலே
நட்சத்திர பூவே
காத்தா வாரேன் காப்பா வாரேன் என் காத்தா

பெண்: வழி வழி எல்லாம்
வெடி நெடி வெடி நெடி
படு குழி படு குழி
தோட்டம் எங்க பூவும் எங்க வாசம் எங்க

பெண்: அஞ்சு வண்ண பூவே
கானோம் உன்ன
பிஞ்சி விரல் எங்க
கொஞ்சும் குரல் எங்க
அஞ்சுகமே கண்ணே

பெண்: ஓ விடாம ஓடி படாம ஆடி
நிலவ மீறி வினாவ சூடி
பராரி போலே பித்தேறி வாடி
குலாவி கூடி துலாவி தேடி
ஆனா நீ பார்த்த

குழு: அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
ஓ உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்

பெண்: அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்

பெண்: அஞ்சு வண்ண பூவே
காணலையே உன்ன
காணலையே உன்ன
காணலையே உன்ன

பெண்: நந்தவனமோ ஓர் மலரோ
தாய்மையின் குரலோ பேர் அருளோ
உலகத்தில் இல்ல

பெண்: வட்ட வட்ட பாத
சுத்துதே என் கால
எங்க இனி போவ
எங்க இனி போவ

பெண்: அஞ்சு வண்ண பூவே
வா கொஞ்சி விளையாடு
அஞ்சு வண்ண பூவே
வா கொஞ்சி விளையாடு

பெண்: பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்திருப்பேன் பாரு
பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்திருப்பேன் பாரு

குழு: அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
ஓ உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்

பெண்: அஞ்சு வண்ண பூவே
தாலேலோ லாலே

Anju Vanna Poove Song Lyrics in Tamil from Thug Life (2025) Movie Composed by A. R. Rahman and Sung by Charulatha Mani and Lyrics are penned by Karthik Netha. முத்தமழை பாடல் வரிகள்.