Anbe Peranbe Lyrics in Tamil
ஆண்: அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே
பேரன்பே பேரன்பே பேரன்பே
ஆண்: ஹோ ஓ ஓ ஹோ
ஓ ஓ ஹோ
ஓ ஓ ஹோ
பெண்: ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் கடலின் மீது
மழை நீராய் சேருவேன்
பெண்: அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா ஈர்க்குமா ஆ
பெண்: மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா தோற்குமா
ஆண்: மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ
ஆண்: திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே தூண்டுதே
பெண்: நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க்க ஏங்குதே
பெண்: தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே
ஆண்: ஓ கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும் ம்ம்
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்க்கும்
ஆண் மற்றும் பெண்: அன்பே பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே ஆகுதே
ஆண் மற்றும் பெண்: உறவே நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே ஆகுதே
ஆண்: உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ