ஆராரிராரோ

ஆராரிராரோ Aarariraro Lyrics in Tamil
Movie: Raam(ராம்)
Music: Yuvan Shankar Raja
Singer: K. J. Yesudas
Lyricist: Snehan(சினேகன்)

Aarariraro Lyrics in Tamil – Snehan

ஆண்: ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண்: ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண்: வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே

ஆண்: அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆண்: ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண்: வோ் இல்லாத மரம்போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊா் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே

ஆண்: பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓா் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆண்: ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆண்: தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா

ஆண்: காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ

ஆண்: இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற

ஆண்: ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

Other Songs From Raam Movie